வியட்நாம் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்
. வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ட்ரொங் டன் சங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முதல் தடவையாக இலங்கை வரவுள்ளார்.நாளைய தினம் இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி எதிர்வரும் 15ம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார் வியட்நாம் ஜனாதிபதியுடன் அவருடைய பாரியார் மை தி ஹன், வியட்நாம் பதில் பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் 60 பேர் அடங்கிய வர்த்தக குழுவினரும் இலங்கை வரவுள்ளனர். 1970ம் ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டதன் பின் வியட்நாம் ஜனாதிபதி முதல் முறையாக இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment