அரசியல் பயங்கரவாதமே சகோதரனின் உயிரைக் காவு கொண்டது - பாரத லக்க்ஷ்மனின் சகோதரர்
அரசியல் பயங்கரவாதமே எனது சகோதரனின் உயிரைக் காவு கொண்டது என முல்லேரியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அமரர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் சகோதரர் அசேல பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தமது சகோரருக்கு போதியளவு பாதுகாப்பை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களினால் சக அரசியல்வாதி கொலை செய்யப்படும் சந்தர்ப்பம் மிகவும் துரதிஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற போதிலும் அவை எந்தளவிற்கு காத்திரமான முறையில் நடைபெறுகின்றன என பாரதவின் சகோதரி சுனேத்ராகேள்வி எழுப்பியுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது எனவும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கிரமமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென மற்றுமொரு சகோதரியான ஸ்வர்னா தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment