பாரத லக்ஷ்மன் மரணத்திற்கு ஐ.ம.சு.மு கவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மறைவையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று சோக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துரதிஷ்டவசமாக காலமான பாராத லக்ஷ்மனின் மரணம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கவலை அடைந்துள்ளது.
இவருடைய ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்துவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிரந்தர அரசியல் சேவையை வழங்கிய பாரத லக்ஷ்மனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள சோக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment