மனித உரிமை விவகாரங்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட வேண்டும்
பாடசாலைகளில் மனித உரிமை விவகாரங்கள் கற்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலை பாட விதானத்தில் மனித உரிமை தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்படும் என்றும் மனித உரிமை தொடர்பான அரசாங்கத்தின் செயல் திட்டத்தை முதலில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படாத விடயமொன்று சர்வதேச சமூகத்தில் முன்வைப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்தோடு, மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அமுலாக்கல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment