தமிழ் பாடசாலைகள் மீதும் நெதர்லாந்து அரசின் கண் திரும்புகின்றது.
நெதர்லாந்திலுள்ள 21 தமிழ் பாடசாலைகளும் புலிகளின் முன்னணி அமைப்பொன்றாலேயே நிர்வகிக்கப்படுவதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் யாவும் இவ்வாறான பாடசாலைகள், மற்றும் நிறுவனங்கள் ஊடாகவே புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் வலுபெற்றுள்ள நிலையில் மேற்படி ஊடகச் செய்தி பாடசாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கான நல்லதோர் ஏது நிலையை கொடுக்கும் என நம்பமுடியாது என பலரும் அச்சம் கொள்கின்றனர்.
அச்செய்தியில் பொலிஸாரின் விசாரணைகின்போது கீழ் காணப்படும் விடயங்கள் தெ ரியவந்த தாக கூறப்பட்டுள்ளது.
அம்ஸ்டேர்டம் (Amsterdam), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (The Hague), பிரெடா (Breda), இன்தோவன் (Eindhoven), அம்ஹேம் (Arnhem) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பகுதிகளில் இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன.
அங்கு தமிழ், நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த பள்ளியில் தமிழ் இனத்தை பாராட்டி போதனை, ஆயுத போராட்டத்தை பற்றி கட்டுரை எழுதுதல் மற்றும் தமிழர் போர்க்களம் எப்படி என்பது பற்றியும் கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் அதிகாரத்தை ஈர்ப்பதே குறித்த பள்ளிகளின் நோக்காக இருந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத ஆதர குழுவொன்று வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பள்ளி நடத்தியதில்லை என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதவான்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அவ்வேண்டுதல் புலிகளின் ஆதரவாளர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்டது.
இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் தற்போதுள்ள நீதவான்களே நடத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment