பொலிஸ் கான்ஸ்டபிள் வெட்டிக் கொலை
மொரட்டுவ, மோதர பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயதடைய சமரவிக்ரம என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே படுகொலை செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ கடமையின் நிமித்தம் அவர் சென்றிருந்த போதே இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணையை மேற்கொள்ளச் சென்றிருந்த போதே அவர் கடத்தப்பட்டு பின்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment