Monday, October 10, 2011

கொழும்பு அபிவிருத்தியை பொறுப்பேற்க ஐ.தே.க தயார்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை மக்கள் ஐ.தே.க.வுக்கு வழங்கியுள்ளதன் மூலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் நிராகரித்துள்ளமை உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஐ.தே.க.வின் பொதுசெயலாளர் இது தொடர்பாக விளக்கமளித்தார்.

கொழும்பு மாநகரின் அபிவிருத்தியை பொறுப்பேற்க எமது கட்சி தயாராகவுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் இல்லாவிட்டாலும் கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய எங்களால் முடியும். தேர்தல் ஆணையாளரின் அனுமதி கிடைத்தவுடன் கொழும்பு மேயராக ஏ.ஜே.எம் முசம்மிலை நியமிக்கவுள்ளோம். மாநகர சபையை பெரும்பாண்மையோடு கைப்பற்றியிருந்தாலும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்தே செயற்பட முயற்ச்சிக்கின்றோம்.

இதன் மூலமே அரசாங்கத்திற்கெதிரான பலத்தை வெளிப்படுத்த முடியும் இந்த உளடளூராட்சி சபை தேர்தலின் போது அனைவரது கவனமும் கொழும்பு மாநகர சபை மீதே திரும்பியிருந்தது. எப்படியாவது இதன் அதிகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் மக்களை அச்சுறுத்தியது, அரச வளம்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலர் உட்பட பல்வேறு பாத்திரம்கள் களத்தில் குதித்தன அலரிமாளிகையில் விருந்து உபசாரங்கள் வழங்கப்பட்டது, இலவச உலர் உணவுப்பொருட்கள் பணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் கொழும்பு நகர மக்கள் இச்சவால்களை தகர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றார்.

ரவி கருணாநாயக கருத்து தெரிவிக்கையில் வீடுகளை உடைப்போம் என்று வீடுவீடாக சென்று மக்களை அச்சுறுத்தியபோதும் மக்கள் தைரியமாக ஐ.தே.க வுக்கு நம்பிக்கை வைத்து அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்து அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com