மஹிந்தருக்கு சித்தர் புத்தி மதி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் புத்தி மதி கூறுகின்றார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பாக கருத்துரைக்குபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பழைய பிரச்சினைகளை மீண்டும், மீண்டும் கிளறிக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை எனவும் இவ்வாறான நடவடிக்கைகள் இரு தரப்பு கடும் போக்காளர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment