Tuesday, October 25, 2011

தற்காலிகமாக மூடப்பட்டது கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் செனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.

முதல் வருட மாணவர்களை தவிர்ந்த ஏனைய வருட முகாமைத்துவ மாணவர்களின் பீடம் இரு வாரங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் முகாமைத்துவ பீடத்தில் நீண்ட காலமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவிவருவதாகவும் இன்றும் அவ்வாறு மோதல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலுடன் தொடர்புடைய மாணவர் குழுக்களை பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் தற்போது, காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com