வவுனியா அங்காடிகளின் அவலம். பொருத்தமான இடம்கோரி நகரில் ஆர்ப்பாட்டம்.
வவுனியா தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் மூவினத்தையும் சேர்ந்த அங்காடிகள் வவுனியா நகர சபைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். வவுனியாவில் பன்னெடுங்காலங்களாக மேற்படி வியாபாரத்தினையே வாழ்வாதாரமாக கொண்டுவாழ்ந்து வரும் இவர்கள் மீது கடந்த காலங்களில் நகர சபையின் பொது சுகாதார உத்தியோகித்தர்கள் கடும் அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும், இதற்கு முடிவு வேண்டுமெனவும் அவர்கள் சுலோகங்களை தாங்கி நின்றனர்.
அங்காடிகள் நுகர்வதற்கு ஒவ்வாத உணவினை விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலை அண்மித்த பகுதி தொட்டு நகரெங்கும் வியாபாரத்தில் ஈடுபடும் தாம் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், பல சிரமங்களுக்கு உட்படுத்தபடுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் நகர சபையினர் தமக்கு பொருத்தமான இடமொன்றை ஒதுக்கி தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடத்திற்கு வந்த வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் ரதன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு சாதகமான தீர்வொன்றினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் தலைவராக கனகரட்ணம் உள்ளபோது, பிரதி மேயரான ரதன் அவ்விடத்திற்கு வந்தமையையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
ரதன் தலைமைக்கு கட்டுப்படாதவராக சகலவிடயங்களிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளையே மேற்கொண்டுவருவதாகவும் ரதனின் எல்லைகடந்த செயற்பாடுகள் குறித்து நகர சபையிலுள்ள எதிர்கட்சி ஆழும் கட்சி இருதரப்பினருமே விசனம் அடைந்துள்ளனர்.
முன்னாள் மேயர் நாதன் ராஜனாமா செய்து சென்றதற்கு ரதனின் ஒவ்வாத செயற்பாடுகளும் காரணம் என அச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாதன் ராஜனாமா செய்தபின்னர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் நின்ற ரதனை தலைவர் பதவிக்கு நியமிக்காமல் விருப்பு வாக்குகளில் பின்னி லையில் உள்ள கனகரட்ணத்தை நியமித்ததற்கு ரதனின் செயற்பாடுகளே காரணம் என த.தே.கூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தினை வவுனிய சுயதொழில் செய்வோர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
0 comments :
Post a Comment