சரத் பொன்சேகாவிடமிருந்து குமார் அணியினருக்கு செய்தி
ஜனநாயக் தேசிய கூட்டணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான ஒருவருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்குமார் அணியியினரை சேர்ந்த உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் பத்தரமுல்லை பிரதேசத்தில் இரகசியமான இடமொன்றில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும். இந்த சந்திப்பு சரத் பொன்சேகாவின் அறிவுறுத்தலின் பேரில் இடம் பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
எப்படி இருந்த போதிலும் இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
0 comments :
Post a Comment