வாரியப்பொலவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட ஆறுபேர் பலி
குருணாகல, வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் சிறுவன் உட்பட ஆறு பேர் மரணடைந்துள்ளனர். இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதினால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் பலர் காயடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுங் காயங்களுக்கு இலக்காகியுள்ளார். வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துக்குள்ளான வாகனம் மற்றுமொறு வாகனத்துடன் மோதுண்டுள்ளதுடன் அதனைப் பொருட்படுத்தாது சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment