தபால் நிலையங்கள் ஊடாக கட்டணங்களைச் செலுத்த நடவடிக்கை.
தபால் அலுவலகம் மூலம் கட்டணங்கள் செலுத்துவதற்கு புதிய சேவையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப நீர், மின்சாரம், மற்றும் தொலைபேசிக் கட்டணங்களை நாடுபூராகவுள்ள தபால் அலுவலங்களின் மூலம் செலுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக தபால் சேவை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இது குறித்து நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதா அமைச்சர் தெரிவித்தார்.
கட்டணச் சிட்டைகள் செலுத்துவதற்கு விசேட அமைப்பு சகல தபால் நிலையங்களிலும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 644 தபால் அலுவலுகமும், 3408 உப தபால் நிலையங்களும் நாடுபூரா இதுவரைக்கும் செயற்படுகிறது. இதன் மூலம் கட்டணங்களைச் செலுத்துவதற்கான சேவையை செயற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார் .
...............................
0 comments :
Post a Comment