புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்புக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு
அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பு ஆசிரியர் சங்கங்களின் கருத்தை பெறாமலேயே அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளதாகவும் புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கருத்தை பெற்றுக் கொள்ளாமல் ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளமை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பு பிரச்சினைகள் பல ஏற்படும் என்று அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment