21 உள்ளூராட்ச்சி சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் :
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பை கைபற்றியது
நேற்று நடைபெற்ற 23 உள்ளூராட்ச்சி சபைக்கான தேர்தலில் 21 உள்ளூராட்ச்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபையின் ஐந்து தேர்தல் பிரிவுகளிலும் அதிகமான எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று கொழும்பு மாநகர சபையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைபற்றியது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறியுள்ளது. இந்தக் கட்சி 101920 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக ஏ. ஜே.எம் முஸ்ஸமில் களமிறங்கியிருந்தார். ஆளுந்தரப்பில் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சரான மிலிந்த போட்டியிட்டார். இந்தக் கட்சி 77089 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதேவேளை, மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26229 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9979 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது
கொழும்பின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான கொழும்பு மத்திய தொகுதியில் அளுந்தரப்பு தோல்வியடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்புக்குத் தாவிய முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான மஹ்ரூபின் கோட்டையாக கொழும்பு மத்திய தொகுதி திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது..
இதேவேளை, நீர்கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37232 வாக்குகள் பெற்று16 ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. இங்கு ஐக்கிய தேசியக் கட்சி 24712 வாக்குகள் பெற்று 9 ஆசனங்களை பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஒரு உறுப்பினர் தெரிவாகியிருந்தார். இம்முறை ஒருவரும் தெரிவாகவில்லை. அதற்கு பதிலாக 1588 வாக்குகள் பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளமை விஷேடமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நீர்கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தது. அத்துடன் நீர்கொழும்பு மாநகர சபையானது கொழும்பை போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இருத்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் -கொழும்பு
சபை -கொழும்பு மாநகர சபை
ஐக்கிய தேசிய கட்சி 101920 வாக்குகள் - 24 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 77089 வாக்குகள் - 16 உறுப்பினர்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 26229 வாக்குகள் - 6 உறுப்பினர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9979 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி 7830 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயேட்ச்சைகுழு 2- 4,085 வாக்குகள் - 1 உறுப்பினர்
மக்கள் விடுதலை முன்னணி 3,162 வாக்குகள் - 1 உறுப்பினர்
சுயேட்ச்சைகுழு 1- 2,962 வாக்குகள் - 1 உறுப்பினர்
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தல் முடிவுகள்
வட்டம் - கம்பஹா
சபை - நீர்கொழும்பு மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,232 வாக்குகள் - 16 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி 24,712 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,588 வாக்குகள் - 1 உறுப்பினர்
கல்முனை மாநகர சபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் - அம்பாறை
சபை - கல்முனை மாநகர சபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகள் - 11 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி 9,911 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,524 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி 2,805 வாக்குகள் - 1 உறுப்பினர்
செய்தியாளர் - எம். இஸட். ஷாஜஹான்
0 comments :
Post a Comment