21 ஆயிரத்து 500 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமையில்
தேர்தல் பாதுகாப்பு கடமையில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் , தேர்தல் விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தேவை எற்பட்டால் மேலதிக பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் மேலும் கூறினார்.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புகளுடன் இன்று காலை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆயிரத்து 167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், வாக்கெண்ணும் பணிகளுக்காக 14 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment