உலகளாவிய ரீதியில் வருடம்தோறும் 17.1 மில்லியன் பேர் இருதய நோயினால் இறப்பு!
உலகளாவிய ரீதியில் வருடம் தோறும் 17.1 மில்லியன் பேர் இருதய நோய்களினால் இறப்பதாக இலங்கை இருதய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் மொஹான் ஜயதிலக்க குறிப்பிடுகிறார். கடந்த வாரம் அனுஸ்டிக்கப்பட்ட உலக இருதய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதய நோய்களை குறைப்பதற்கு ஒவ்வொரு தனிநபரும் தமது நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும். புகைத்தலை கைவிடுவதோடு நல்ல சுகாதார உணவுப்பழக்கத்தினை கடைப்பிடிப்பது அவசியம். தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்வதோடு சிறந்த உடற் பராமரிப்பு செய்வதன் மூலம் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.
ஒருசில நல்ல வீடுச்சூழல் பழக்கவழக்கம்கள் நீண்ட ஆயுளுக்கு வழி வகுப்பதோடு இதய நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. ஆனால் அவற்றை பலர் கடைப்பிடிப்பதில்லை. உலகில் அத்களவிலானோர் இருதய நோய்களினாலேயே வருடாந்தம் இறக்கின்றனர் இவர்களில் 82 வீதமானோர் வருமானம் குறைந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment