SMS மூலம் பொலிஸ் அறிக்கைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளளாம்.
மக்கள் தாம் விண்ணப்பித்துள்ள பொலிஸ் அறிக்கைகள் தொடர்பிலான தகவல்களை இலகுவாக அறிந்து கொள்வதற்கான திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் செயற்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்திற்கு அமைய PLC இடைவெளி CRC என டைப் செய்து இடைவெளிவிட்டு தாம் கோரியுள்ள பொலிஸ் அறிக்கை இலக்கத்தை குறிப்பிட்டு 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) ஒன்றை அனுப்பிவைப்பதன் மூலம் மக்கள் தமக்கு தேவையான பொலிஸ் அறிக்கை தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துக்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
0 comments :
Post a Comment