இலங்கையரின் பற்கள் பழுதடைந்து வருகின்றன -சுகாதார அமைச்சின் ஆய்வில் தகவல்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இலங்கையர் ஒவ்வொருவரினதும் குறைந்த பட்சம் ஆறு பற்களாவது படிப்படியாக சேதமடைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலமாகவே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை சனத்தொகையில் 120 மில்லியன் உட்குழிவு உடைய பற்களை கொண்டோர் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு குறிப்புpட்டுள்ளது. இலங்கையில் அதிகமானோர் வெற்றிலை சப்பும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி 80 சதவீதமான பஸ் சாரதிகளும், நடத்துனர்களும் வெற்றிலை சப்பும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது .
பாபுல், பான்பராக் போன்ற பல்வகையான வெற்றிலைகளை பல்வேறு வயதினனரும் பயன்படுத்துகின்றனர்
0 comments :
Post a Comment