பூப்புனித நீராட்டு விழாவில் அன்பளிப்பை திருடிய இசைக் கலைஞருக்கு பிணை.
பூப்புனித நீராட்டு விழா உற்சவமொன்றில் இசைவழங்குவதற்காக சென்று அந்தப்பெண்ணுக்கு அன்பளிப்பாக பணம் மற்றும் பணவவுச்சர்கள் அடங்கிய பையை திருடிய சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இசைக்கலைஞர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 5 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் ஒருலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவராவார் முறைப்பாட்டாளரது இரண்டாவது மகள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் வகையிலேயே அவர்களது வீட்டில் இந்த உற்சவம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரது கணவர் வெளிநாட்டில் தொழில்செய்து வருகிறார் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு 10 மணிமுதல் பின்னிரவு 3மணிவரை இசைக்குழுவினர் இசைவழங்க உற்சவம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு டி.ஜே குழுவொன்றே இசை விருந்து வழங்கியுள்ளது. இந்நிலையிலேயே இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
தனது மகளுக்கு விருந்தினர்களால் வழங்கப்பட்ட பணம் மற்றும் வவுசர்கள் அடங்கிய பையை சந்தேக நபர் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீசியுள்ளதாகவும், பணம் அடங்கிய கடித உறைகளையும் வவுசர்களையும் சந்தேக நபர் தனது மார்பு பையில் மறைத்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே செல்வதை தான் கண்டதாகவும். அந்தப்பணப்பையை வீட்டின் மூன்றாவது மாடியில் கதிரை ஒன்றின் மேல் வைத்திருந்ததாகவும் வழக்கின்
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேக நபரை விசாரித்த போது குப்பைதொட்டியொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் திருடப்பட்ட பணம் மற்றும் வவுச்சர்கள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. வவுச்சர்கள் நீங்கலாக 16500 ரூபா பணம் இதன்போது கண்டு பிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் குறிப்பிட்ட இசைக்குழுவின் உறுப்பினர் எனவும் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர் இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
0 comments :
Post a Comment