பிரித்தானியாவில் பிரபாகரனின் பெயரை உச்சரிக்காத மாவை வாங்கிக்கட்டினார்.
அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த மாவை சேனாதிராஜா அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பேசினார். பேசும்போது இலங்கையில் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை எனவும் அதற்கு ஒப்பாக உலகவரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றையும் எடுத்தியம்பினார். அப்போது உலகின் பல தலைவர்கள் செய்த அர்பணிப்புக்கள் அவர்கள் மக்களுக்கு சொல்லிச் சென்ற விடயங்கள் பலவற்றை எடுத்துக்கூறினார்.
அவரின் உரை முடிவில் அங்கு கலந்து கொண்டிருந்தவர்களுக்கு அவரிடம் கேள்விகள் கேட்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் மாவையை பார்த்து ' நீங்கள் உங்களுடைய பேச்சில் எத்தனையோ தலைவர்களை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் உங்கள் வாயிலிருந்து பிரபாகரன் எனும் நாமம் வாய் தவறிக்கூட வரவில்லை. இதையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன், நீங்கள் பிரபாகரனை தலைவர் என ஏற்றுக்கொள்ளவில்லையா என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.
மேற்படி நபரின் கருத்து தொடர்பாக மாவை தனக்கு நெருக்கமானவர் ஒருவரிடம் பேசுகையில் பிரபாகரனை நான் எப்போது தலைவர் ஏற்றிருந்தேன் என நகைத்துள்ளார்.
1 comments :
It's unfair to think or imagine that the other person must comply with your views.Each has his or her own views,which we proudly say " pure democracy "
Post a Comment