Monday, September 5, 2011

புலிகளுக்கு வாகனங்களை வழங்கிய சந்தேக நபர்களுக்கு தடுப்புக் காவல் நீடிப்பு

புலிகள் இயக்கத்திற்கு வாகனங்களை பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரையும் கல்கிஸை மேலதிக மஜிஸ்ட்ரேட் எதிர்வரும் நவம்பர் மாதம் 112 ஆம் திகதி வரை தொடர்ந்து தடுத்து வைக்க அனுமதி வழங்கினார்.

அஜித் தர்மதாச , சுமேத லக்மால், சுரேஸ் வஸந்த குமார், யொஹன் தினேஷ் ஆகிய சந்தேக நபர்களே பொலிஸாரால் தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டவர்களாவார்.

முதலாவது சந்தேக நபர் 16 இலட்சம் ருபா பெறுமதியான வாகனமொன்றை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது கிடைத்த தகவலின்படி ஏனைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com