கிளின்டன் உலக பிரவேசம் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியூயோர்க் நகரில் நடைபெறும் கிளின்டன் உலக பிரவேசம் அமர்வில் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனினால் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் ஊடாக தற்போது 180 நாடுகளைச் சேர்ந்த 800 மில்லியன் மக்கள் நன்மை அடைந்துள்ளனர்.
தற்போதைய மற்றும் முன்னாள் அரச தலைவர்கள், செல்வந்தர்கள், சர்வதேச நிறுவனத் தலைவர்கள், நலன்புரி அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நேற்று ஆரம்பமான கிளின்டன் உலகப் பிரவேசம் அமர்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது தற்போதைய உலகில் எதிர்நோக்கப்படுகின்ற பொருளாதார நெருக்கடிகள், கல்வி, சுற்றாடல், எரிசக்தி மற்றும் உலக சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரண்டாவது நாளாக நடைபெறும் கிளின்டன் உலகப் பிரவேசம் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஹேகொப் சூமா உள்ளிட்ட அரச தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், பொருளாதார நெருக்கடியும் காலநிலை மாற்றுமும் தற்போதைய உலகம் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளாகும் என சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment