யாழ்-கொழும்பு பஸ்சேவை புறக்கோட்டையிலிருந்து மாத்திரமே ஆரப்பிக்கப்படவேண்டுமாம்.
யாழ் கொழும்பு பஸ்கள் யாவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியிலிருந்து கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் அதெற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டுமென போக்குவரத்து பொலிஸ்சேவை அறிவித்துள்ளது.
நேற்று வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டிய பொலிஸ் அதிகாரிகள் வெள்ளவத்தையிலிருந்து இயங்கும் பஸ்களின் உரிமையாளர்களை அழைத்து இவ்வறிவித்தலை தெரியப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் போர் முடிவுற்றதை தொடர்ந்து 60 பஸ் வண்டிகள் கொழும்பு - யாழ்பாணம் சேவையில் ஈடுபட்டுள்ளது. இவையாவும் வெள்ளவத்தையிலிருந்தே புறப்படுவது வழமை.
இவ்வாறான பஸ் சேவைக்கான ஆசனப்பதிவுகளும் வெள்ளவத்தையிலுள்ள பல கடைகளிலும் தொலைத்தொடர்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வறிவித்தலின் பின்னர் இவர்களின் வருமானம் முற்றிலும் வீழ்சியடையும் என எதிர்பார்கப்படுகின்றது.
ஆத்துடன் உரிய அனு மதி ப த்தி ரங்கள் இன்றி யாழ்-கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட்ட 8 பஸ் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment