சபையில் மன்னிப்புக்கேட்டார் ஈபிடிபி எம்பி.
அவசரகால சட்டத்தினை நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் விசேட பிரேரணையில் கலந்து கொண்டு பேசிய ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மாகாண சபைக்கும் நகர சபைக்கும் வித்தியாசம் புரியாமல் பேசி மூக்குடைபட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற மேற்படி பிரேரணையில் பேசிய பா.உ சந்திரகுமார் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதனின் கொலை முயற்சிக்கு சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரே எனத் தெரிவித்ததுடன் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் நல்லவர், மிகவும் பண்பானவர். ஆனால் அந்தப் பத்திரிகை உண்மைகளை எழுதுவதற்கு பதி லாக உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளையே வெளியிடுகின்றது எனத் தெரிவித்தார்.
அத்துடன் குகநாதன் தாக்கப்பட்டதற்கு ஈ.பி.டி.பி.க்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாகாண சபை உறுப்பினர் ஒருவரே பின்னணியில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்தது எனக் குறிப்பிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இடைமறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ்.மாவட்டத்தில் மாகாண சபை என்று ஒன்று இல்லை. அப்படியாயின் மாகாண சபையின் உறுப்பினர் எவ்வாறு பின்னணியில் இருந்தவர் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார்.
தனது தவறை உணர்ந்து கொண்ட சந்திரகுமார், மன்னிக்கவும். மாகாணசபை என்று தவறுதலாகக் கூறிவிட்டேன் நான் கூற வந்தது யாழ்.மாநகரசபை உறுப்பினர் என்றதுடன் இந்த விடயம் வழக்குகளுடன் தொடர்புபட்டது என்பதால் மேலதிகமாக பேச விரும்ப வில்லை என நழுவிக்கொண்டார்.
1 comments :
EPDP are fools , they need to go first to primary schools
Post a Comment