லெப்.கேணல் திவா ஒரு துரோகி என்கிறார் சிறிதரன்.
புலிகளின் பாண்டியன் குளம் பயிற்சி முகாமின் பொறுப்பாளராகவிருந்த லெப் கேணல் திவா போன்ற துரோகிகளாலேயே புலிகள் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக பா.உ. சிறிதரன் லண்டனில் புலம்பியதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டனில் தங்தியிருந்தபோதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். லண்டனில் Southall எனுமிடத்தில் விக்கியின் வீட்டில் தங்கியிருந்த இவர் விக்கியின் சகோதரனுடனான நினைவுகளை விக்கியுடன் பகிர்ந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விக்கியின் சகோதரனும் பா.உ. சிறிதரனும் பாண்டியன் குளத்திலுள்ள புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் 1989 இறுதிப் பகுதியில் ஒன்றாக இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொண்டதாகவும், பயிற்சி முடிவில் தான் மருத்துவ பிரிவில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தபோது முகாமின் பொறுப்பாளராகவிருந்த லெப் கேணல் திவா என்பவர் தன்னை உருட்டி உருட்டி அடித்ததாகவும் தெரிவித்துள்ள சிறிதரன் அவ்வாறு திவா நடந்து கொண்டதாலேயே தான் 1990ம் ஆண்டு மாங்குளம் தாக்குதலுக்கு செல்லும் வழியிலேயே ஆயுதத்தை எறிந்து விட்டு ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்:
திவாகரன் போன்றோரின் தவறான வழிமுறைகள் தன்னைபோன்ற எத்தனையோ ஆயுதமேந்தியோரை அவ்வழியிலிருந்து விலக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இவர் தொடர்பாக வட்டக்கச்சி நபர் ஒருவர் கூறுகையில், சிறிதரன் க.பொ.த சாதாரண தரமும் சித்தியடையாமல் புலிகள் இயக்கத்திற்கு சென்று மருத்துவப்பிரிவில் இணைந்து கொள்ள முயன்றதாகவும். ஆவ்வாறு மருத்துவப் பிரிவில் எதாவது படித்துக்கொண்டு புலிகளுக்கு கம்பி நீட்டும் உள்நோக்கத்தை கொண்டிருந்தார் என்பதையும் அறிந்து கொண்ட புலிகள் இவரை நையப்புடைத்தாக தெரிவிக்கின்றார்.
அத்துடன் பின்னர் இவர் கிளிநொச்சியில் தொண்டராசிரியராக பாடசாலை ஒன்றில் பயிற்றுவித்து அதனூடாக ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொண்டதுடன் பாடசாலைக்கு வந்த பிள்ளைகளை புலிகளுக்கு பிடித்து கொடுத்து புலிகளின் ஆசீர்வாதத்தை பெற்று அங்குள்ள கிராமம் ஒன்றிலமைந்திருந்த பாடசாலை ஒன்றின் உப அதிபராக பதவியுயர்வு பெற்றுக்கொண்டதாவும் கூறுகின்றார்.
மேலும் இவர் பேசுகின்ற தமிழ் தேசியம் வெறும் போலி எனவும் பணம் சம்பாதிப்பதற்காக தமிழ் மக்களை இவர் ஏமாற்றுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு இவருக்கு அண்டைநாட்டு புலனாய்வுத்துறை பணம் வழங்குவதாகவும் அதற்கு பரிகாரமாக அவரது சகோதரனுக்கு அந்நாட்டில் வானொலி ஒன்றுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்:
1 comments :
this is ture siritharan is bad fllow not good will
Post a Comment