மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சரின் விஜயம்....
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடங்களைப் பார்வையிடுவதற்காகவே அமைச்சர் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடங்களை பார்வையிட்டதோடு வைத்தியசாலை விடுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதன்போது பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர் மற்றும் அதிதிகளும் நிர்மாணம் செய்யப்பட்டுவரும் வைத்தியசாலைக் கட்டிடத்தையும் பார்வையிட்டதோடு.விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளையும் பார்வையிட்டனர்.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment