அரசாங்கம் யுத்த சுலோகங்களைப் பயன்படுத்தி மக்களைத் ஈர்த்துள்ளது -ஐ.தே.க!
அரசாங்கம் யுத்த சுலோகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் ஈர்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு தெரிவிக்கின்றார். கொத்தடுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொட்டிகாவத்தை- முல்லேரியா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் எருமை மாடுகளுக்கு ஆடை அணிவித்ததைப் போன்று மக்களை ஏமாற்றி, யுத்த சுலோகங்களை பயன்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தரம் குறையும் போது சீமெந்துகளின் தரமும், மருந்துப் பொருட்களின் தரமும், பொற்றோலின் தரமும் குறைவடைவதாக கருணாசேன கொடித்துவக்கு கூறினார்.
குழந்தைகளின் எதிர்காலத்தின் தரமும் அதேபோன்று குறைவடைகின்றதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.
0 comments :
Post a Comment