கொத்தலாவல பிரதேச ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் விபசாரம்: ஏழு பேர் கைது
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பேரில் நவகமுவ - கொத்தலாவல பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்து நான்கு யுவதிகள் உட்பட ஏழுபேரை நுகேகொட வலய அவசர பொலிஸ் அழைப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் மத்துகம, அம்பலாந்தோட்ட, தெல்தெனிய மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். விடுதியில் உரிமையாளராகவும் வைத்தியராகவும் இருந்த ஒருவரையும் விபச்சார விடுதியை நடத்திச் செல்ல உதவியதாகக் கூறப்படும் பொல்கொல்ல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மிறிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக விபச்சார நிலையங்களாக, இயங்கி வந்த ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் பல பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment