நீர்கொழும்பு மாநகர சபை தேர்தல் பிரசார நடவடிக்ககைளில் ஐ.ம.சு.மு டையே பிளவு
நீர்கொழும்பு நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு முக்கியஸ்த்தர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினை நடைபெறவுள்ள மாநகர சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அடுத்து சந்திக்கு வந்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்க கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சரத்குமார குணரட்ன, மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா ஆகியோருக்கிடையிலான உட்பூசலே நகரில் வைக்கப்பட்டுள்ள கட்டவுட்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்படி இரு அரசியல்வாதிகளின் அணியினராக பிரிந்து செயற்படுகின்றனர்.
இதன் காரணமாக மேயர் வேட்பாளர் பெயர் உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன சார்பில் கயான் என்ற வேடபாளர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா சார்பில் அவரது சகோதரரான தயான் லான்ஸா முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இரு தரப்பினரிடையேயும் சுவரொட்டி மற்றும் கட்டவுட் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா சார்பில் போட்டியிடும் தயான் லான்ஸாவின் கட்டவுட் தெல்வத்தை சந்தியில வைக்கப்பட்டுள்ளது. அதில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சரத்குமார குணரட்னவின் படம் இல்லை.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கடோல்கலே பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அமைச்சர் சரத்குமார குணரட்னவின் கட்டவுட்டுக்கு கறுப்பு மை தெளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இடம் பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளின் போது மேலும் பிரச்சினைகள் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment