இராணுவத்திலிருந்து தப்பியோடிய 60 ஆயிரம் பேரை கைதுசெய்ய உடன் நடவடிக்கை
சட்ட ரீதியற்ற முறையில் இராணுவத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் 60 ஆயிரம் இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால ஹபபுஹாராச்சி குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் கைது செய்யப்பட்டதன் பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இராணுவ சேவையிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதியில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 11 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment