Tuesday, August 30, 2011

ஜெயலலிதா அந்தர் பல்ட்டி.

மாகாண அரசால் இவ்விடயத்தில் தலையிட முடியாது என்கிறார் சோ
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்து பல்ட்டி அடித்துள்ளார்

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 72-ன்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து குடியரசு தலைவர் நிராகரித்த சூழ்நிலை குறித்தும் இந்த விஷயத்தில் தமிழக முதல்- அமைச்சரான எனக்கு உள்ள அதிகாரம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் விளக்கமாக அறிவித்தேன்.

3 பேரின் கருணை மனுவை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு இதில் நடவடிக்கை எடுகக முடியாது என்றும் கூறி இருந்தேன். இந்த விஷயத்தில் மீண்டும் குடியரசு தலைவர்தான் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினேன்.

3 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையால் தமிழக மக்கள் இடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் வருத்தம் அடைந்தது பற்றியும் எனது கவனத்துக்கு வந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டு மூலம் ஒருமனதாக நிறைவேறியது

இதேநேரம் தூக்குத்தண்டனை கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சை வலுத்து வருகிறது பலரும் பல கருத்துகளை கூறிவரும் நிலையில் எழுத்தாளர் 'சோ ராமசாமி' கீழ்வருமாறு கூறுகின்றார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மீண்டும் அதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.. ஏற்கனவே மாநில அரசு, இந்த கருணை மனுவை நிராகரித்துள்ளது. அது கலைஞர் அரசு செய்து முடித்த காரியம். இப்போது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த நிலையில் மாநில அரசு அதில் தலையிட முடியாது.

கேரளா, ஆந்திராவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகும் மத்திய அரசு மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்

நீங்கள் சுட்டிக் காட்டுக்கிற ராமதாசின் பேச்சிலேயே கூட ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மாநில அரசு கருணை மனுவை ஏற்றதாக சொல்லப்படவில்லை. மீண்டும் மத்திய அரசுதான் பரிசீலனை செய்ததாக அவர் சொல்லி உள்ளார்.

இந்த நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இந்த பேச்சிலும் உறுதியாகிறது. இனி 3 பேரையும் காப்பாற்ற வழி இருப்பதாக தெரிகிறதா என்றால் மரண தண்டனையையே இனி கிடையாது என்றால்தான் இதுவும் நிற்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com