சீனாவில் பெண்கள் பற்றாகுறை! அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி
சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ள நிலையில் அங்கு பெண்கள் எண்ணிக்கை ஆண்களை விட 13 சதவீதம் குறைதுள்ளது. இந்நிலையில் சீன அரசு அண்டை நாடுகளில் இருந்து பெண்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலில் உள்ள சீனாவில் பிறக்கும் அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என சீனர்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிந்து பெண் சிசுவாக இருக்கும் பட்சத்தில் அதை கருவிலேயே அழிக்கப்படுகிறது . இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment