பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிடகல்கொட என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நபரை பொலிசார் கைது செய்வதற்காக சுற்றிவளைத்த போதே அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் மாதம் மெகசின் சிறைச்சாலையிலிருந்து குறித்த சந்தேக நபர் தப்பியோடியதுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கெதிராக பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கொழும்பு, கல்கிசை, கெஸ்பாவ மற்றும் கண்டி ஆகிய நீதிமன்றம்களில் வழக்குகள் உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சிறையிலிருந்து தப்பியோடிய சந்தேக நபர் இருக்கும் இடம் பற்றி பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்தை சுற்றி வளைத்தபோது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பலியான சந்தேக நபரின் சடலம் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment