தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க முடியாது -ஜனதா கட்சி.
இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அதில் இருந்து விடுதலை செய்ய முடியாது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததன் பின்னர் அவர்களை விடுவிக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர் ஏற்கனவே இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதுவும் இந்திய அரசியல் யாப்பு மீறி மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குறித்த மூன்று பேரையும் விடுவிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு அதிகாரம் இல்லை எனவும் பயங்கரவாதம் தொடர்பில் இனியும் இந்தியா மிதநிலை போக்கை கடைபிடிக்க கூடாது என அவர் கோரியுள்ளார்.
0 comments :
Post a Comment