ஓய்வு பெற்றுச் செல்லும் சட்டமா அதிபருக்கு அமைச்சரவைக்கான ஆலோசகர் பதவி
சட்டமா அதிபர் மொஹன் பீரிஸ் இம் மாதம் 31 ஆம் திகதி ஓய்வு பெற்ற பின்னர் அவரை அமைச்சரவையின் சிரேஸ்ட ஆலோசகராக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதி பெற்றுள்ளதாகவும். அமைச்சரவை குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பிரேரணைகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் அதற்காக சிரேஸ்ட சட்ட ஆலோசகர் ஒருவரை நியமிப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment