Thursday, August 18, 2011

ஆயுர்வேத நிலையமென்ற பெயரில் இயங்கி வந்த விபசார நிலையம் சுற்றிவளைப்பு : 6 பேர் கைது

ராஜகிரிய பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபசார நிலையமொன்றை மிரியான பொலிஸார் சுற்றி வளைத்து ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நாவல ராஜகிரிய - கொஸ்வத்தை பகுதியில் பல அறைகளை கொண்ட கட்டிட மொன்றில் ஆயுள் வேத ஆரோக்கிய நிலையம் (Green Herbal Health Centre) vன்ற பெயரில் 62 ஆயிரம் ருபா மாத வாடகையில் இந்த விபசார நிலையம் இயங்கி வந்துள்ளது.

இந்த நிலையம் தொடர்பாக பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விபசார நிலையத்தின் முகாமையாளரான பெண் ஆவார் . மூவர் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களாவர். ஏனைய இருவரும் அந்த நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஆவர் வாடிக்கையாளர்களில் ஒருவர் வைத்தியர் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த விபசார நிலையத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், உயர் பதவி வகிக்க கூடியவர்கள், வர்த்கர்கள், பாதாள உலகத்தவர்கள் என பல தரப்பட்டவர்களும் வாடிக்கையாளர்களாக இருப்பதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையத்தில் ஐந்து பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒருவருக்கு மாத சம்பளமாக 15 ஆயிரம் ருபா வழங்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு மேலதிகமாக வாடிக்கையாளர்கள் 'டிப்' பணமாக 150 ருபா வரையில் கொடுத்துள்ளனர் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆயிரம் ருபாவே கட்டணமாக அறவிடப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந் நிலையம் பிரசித்தம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது மேலும் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்ப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com