கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் போலிவிரிவுரையாளர் ஒருவர் கைது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து இலங்கையின் கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் போலிப் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து விரிவுரையாளர் பதவியொன்றைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் கைது செய்து மொறட்டுவ நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தியுள்ளனர்.
இவர் சமர்ப்பித்த பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டப் படிப்புக்கான பட்டச்சான்றிதழ்களை ஆய்வு செய்த போதே அவை போலியானவை என்று தெரியவந்தது. அதனையடுத்து அவரது போலிச்சான்றிதழ்கள் சர்வதேச பொலிசாரின் விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து இவரை 12ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிமான இராணுவப பல்கலைக்கழகத்தினுள் போலிப்பட்டப் படிப்புச் சான்றிதழ் மூலம் ஊடுருவியது பாதுகாப்புக் கட்டமைப்புகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment