வானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.
மகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார்.
கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெரும் பணமோசடி ஒன்றினை மேற்கொண்டுள்ளமை வெளிச்சத்திற்கு வருகின்றது. சாவகச்சேரி, கல்வயல் பெருங்குளம் சந்தியைச் சேர்ந்த கந்தையா தர்சனா எனும் பெண்ணே குறிப்பிட்ட ஊடகவியலாளரின் காதலியாவர். இவர் FACEBOOK ஊடாக புலம்பெயர் தமிழ் இளைஞர்களை தொடர்புகொண்டு, தான் வன்னியுத்தத்தில் குடும்பத்திலுள்ள அனைவரையும் இழந்துள்ளதுடன் இலங்கையில் தொடர்ந்து வாழ்வதற்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ளதாகவும், வெளிநாடு ஒன்றில் சென்று தனது கல்வியை தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீசாவினை பெற்றுக்கொள்வதற்காக பிரித்தானிய தூததரகத்திற்கு வங்கிநிலுவையில் போதிய பணம் காண்பிக்கவேண்டியுள்ளதாகவும் அதற்கானபணத்தை கைமாறாக தந்துதவும்படியும், அதை திருப்பி தருவேன் என்றும் வேண்டியுள்ளார். இவ்வாறு அவர் பணத்தினை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் தொடர்புகளை துண்டித்து வந்துள்ளார்.
இவைஅனைத்துக்கும் அப்பால் இவர் பல இளைஞர்களிடம் தான் அவர்கள் ஒவ்வொருவரையும் காதலிப்பதாகவும் பாசாங்கு செய்து பணம்பறித்துள்ளார்.
இம்மோசடியுடன் குறிப்பிட்ட வானொலியின் ஊழியர்கள் பலரும் இணைந்தே செயற்பட்டுள்ளனர் என நம்பமுடிகின்றது.
தற்போது குறிப்பிட்ட நபரினை ஊடகங்கள் தொடர்புகொண்டு மேற்படி மோசடி தொடர்பாக வினவுகின்றபோது அவர் கொலைமிரட்டல் விடுத்துவருகின்றார்.
பிரித்தானியாவை தளமாக கொண்ட இணையத்தளம் ஒன்று இவரிடம் இது தொடர்பாக வினவியபோது இலங்கைவந்தால் கண்டதுண்டமாக வெட்டிக்கொலைசெய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இவ்வானொலியின் கலையகத்தை இலங்கைநெற் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் தொடர்பாக வினவியபோது அவர்கள் தகாதவார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததுடன், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பில் தனிநபர்களுக்கும் ஊடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமையை உதாசீனம் செய்தனர். இவ்வாறான நபர்கள் இலங்கையின் ஊடகத்துறையில் இன்னும் இருக்கின்றனர் என்பதை இது உணர்த்துகின்றது.
மேற்படி பெண்ணின் சகோதரர் ஒருவர் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவருவதாகவும் மோசடி தொடர்பாக அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தபோது, அவர் தமது கு டும்ப த்தினரால் பல காலங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டுள்ளார் என சகோதரன் நழுவி வருவதாக தெரியவருகின்றது.
தர்சனா தனது வங்கிக்கு பெற்றுக்கொள்ளும் பணத்தினை உடனடியாக வாபஸ் பெற்று காதலனின் வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு வந்துள்ளார். ஆனால் தற்போது பணம் தன்னிச்சையாக காதலனின் வங்கி கணத்திற்கு மாறுவதற்கு வங்கிக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்திற்கு தர்சனா தனது ஒன்று விட்ட சகோதரன் ஒருவனை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் எதுவுமே விளங்காத அச்சிறுவன் இப்பணமாறுதல் தொடர்பாக பெரிய தாயிடம் தெரிவித்தபோது அவர் வங்கிக்கு சென்று தனது மகளின் வங்கிகணக்கு நடைமுறைகளை பார்வையிட்டபோது அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். காரணம் கடந்த மாதம் மாத்திரம் மகளின் வங்கிக்கு ஒருகோடியே 40 லட்சம் பணம் வந்துள்ளமையை நடைமுறை காண்பித்துள்ளது.
0 comments :
Post a Comment