இந்திய வெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
தமிழக மக்களின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக அரசாங்கமும் மக்களும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் குறித்து, மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பானது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை என இராஜதந்திரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தமிழக மாநிலமானது இந்தியாவின் ஓர் பகுதி என்பதனை மறந்து விடக் கூடாது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லிக்கு இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ;ட ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான உறவுகள் குறித்து தமிழக மாநில அரசாங்கத்திற்கு சகல தகவல்களும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்ததெந்த வழிகளில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பதனை ஆராய்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ஜனநாயக உரிமைகளுக்கு அமைவாக தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் தங்களது நிலைப்பாட்டை சுதந்திரமாக வெளியிடுவதாகவும் இந்தக் கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசே சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கை இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடை பெறவிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமாராவ் இதனை கூறியுள்ளார்.
புதுடில்லியில், சவுத் புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் விஷ;ணுபிரசாத் மற்றும் ஹர்ஷ; சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை. அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிருபமாராவ் தெரிவித்தார்.
மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடு களை இந்தியா மேற்கொள்ளவில்லை. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது என்றும் நிருபமாராவ் மேலும் தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
0 comments :
Post a Comment