மனைவியின் காதை கடித்துதின்ற கணவன்
இந்தியாவின் பெங்களுரில் உள்ள குமாரசுவாமி நகரில் தன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தன் மனைவியின் காதை கடித்துதின்ற கணவனின் செய்கை பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து காதை பறிகொடுத்த 34 வயதான ரூபா காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில் தன் கணவர் நாகராஜ் ரெட்டி வீட்டில் தன்னுடன் நேரத்தை செலவழிப்பதில்லை என்றும் தேவையில்லாமல் வெட்டியாக ஊரை சுற்றி பார்ப்பதாலும் அடிக்கடி சண்டை வரும் என்றார்.
அப்படி கடந்த செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு ரெட்டி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் அதை அவரது மனைவி தட்டி கேட்டதால் இருவருக்கும் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரெட்டியின் கோபம் வழக்கமானது என்று கருதிய ரூபா தூங்கி விட்டார். ஆனால் கோபத்துடன் இருந்த ரெட்டி உறங்கி கொண்டிருந்த மனைவியின் காதை கடித்துள்ளார்.
வேதனை தாங்க முடியாமல் கதறிய மனைவியின் அலறலை பொருட்படுத்தாமல் காதணி உள்ள பகுதியை மட்டும் விட்டு விட்டு எஞ்சிய காதை கடித்து தின்று விட்டு தப்பி ஓடி விட்டார். தலைமறைவாகியுள்ள ரெட்டியின் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment