Tuesday, July 5, 2011

துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு எதிராக துனிசிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது போதைமருந்து கடத்தல் ஆயுத பறிமாற்றம், தொல்பொருள் அகழ்வுக் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், அப்செந்தியாநீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.முன்னர் பென் அலி மற்றும் அவருடைய மனைவிக்கு லீலா திராபெல்சி ஆகியோருக்கு 35 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. பென் அலி 72,000 அமெரிக்க டாலர்கள் அபராத பணமான செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். எனினும் நீதிமன்றத்தின் மீள் அறிவிப்பின் பிரகாரம், பென் அலிக்கு 15 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக துனிசியாவை ஆட்சி செய்து வந்த் பென் அலி, கடந்த மாதம் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து பதவி விலகினார். அவர் மீது 182 பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மக்கள் புரட்சியின் போது ஏற்பட்ட கலவரங்களில் 300க்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com