கிளிநொச்சியில் பொலிஸார் கொலை! ஸ்ரார் ஹோட்டல் ஊழியர்கள் ஜவருக்கு விளக்கமறியல்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி பதில் நீதிவான் திருமதி ச.விஜயராணி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஏ9 பா தையில் அமைந்துள்ள ஸ்ரார் ஹோட்டல் ஊழியர்கள் என தெரியவருகின்றது.
கொலைசெய்யப்பட்டுள்ள பொலிஸ் காண்டபில் பல்லேகலையைச் சேர்ந்த ஆனந்த சமரகோன் (வயதுன41) எனவும் அவரது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் விசாரணைகளின்போது வெளிவந்துள்ளது. இவரது சடலம் உமையாள்புரம் வீதியோரத்தில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை பரந்தனில் உள்ள மதுபானசாலைக்குச் மது அருந்தச் சென்றார் என்றும் போதையில் அங்கு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் என்றும் பொருட்களுக்குச் சேதம் விளைவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மதுபானசாலையில் கடமையில் இருந்தோர் பொலிஸ் அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவத்தினை தொடர்ந்து வன்னி பகுதியில் கடமையாற்றும் பொலிஸார் மீது இறுக்கமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பொலிஸார் யாவரும் பிற்பகல் 6 மணிக்கு பின்னர் பொலிஸ் நிலையங்களை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று பொலிஸ் நிலைங்களிற்கு அருகாமையில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே சென்று மது அருந்திவந்த பொலிஸார் அனைவரையும் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment