பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் இலங்கைக்கு இரகசிய விஜயம்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் செயலாளர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை, கொழும்பு ஹில்டன் விடுதியில் உள்ள ஸ்பைசீஸ் உணவகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் மற்றுமொரு வெளிநாட்டு பிரஜை ஒருவரும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே, லியம் பொக்ஸின் செயலாளர் இலங்கை
சென்றிருந்ததாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துள்ளார். இதன் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை சந்தித்து பேசுமாறு கோத்தபாய ராஜபக்ஷவே ஆலோசனை வழங்கியுள்ளார். லியம் பொக்ஸின் செயலாளரது இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை ரோஹித்த போகொல்லாகமவே மேற்கொண்டிருந்தார்.
0 comments :
Post a Comment