நிதிமூலத்தில் குறிவைக்கும் கே.பி - குடு மனோ குழுவினர்.
ஓட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் ஒரே தலைவன் சூரியதேவன், அவன் முருகனுக்கு நிகரானவன், தமிழ் தேசியத் தவைவன் என மக்களுக்கும் தம் அமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களுக்கும் கூறி வளர்க்கப்பட்ட புலிகளமைப்பு தற்போது மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து நின்று தமது உண்மை முகத்தினை காட்டிவருகின்றனர்.
மேற்படி தலையங்கம் இலங்கைநெற் ன் தலையங்கம் அல்ல. புலிகளின் சொத்துக்களுக்காக மூன்று பிரிவாக பிரிந்து நின்று தம்முள்ளே குத்துப்படும் ஒருகுழுவினால் வெளியிடப்படும் கறுப்பு எனும் பத்திரிகையினதாகும். அதில் வெளியிடப்பட்டுள்ள விடயத்தினை கீழே ஒரு எழுத்துக்கூட மாற்றாமல் வாசகர்கள் முன்வைக்கின்றோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி நாம் விரிவாக எழுத முற்படவில்லை காரணம் புலிகள் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்காகவே போராட்டம் என்றும் , புனர்வாழ்வு அமைப்புக்கள் என்றும் ஏமாற்றி வருகின்றார்கள் என நாம் தொடர்சியாக தெரிவித்து வந்தமைக்குச் சான்றாகும்.
செய்தியின் முழுவடிவம்.
கே.பியின் வழிகாட்டலில் இயங்கும் நரிகேசி உருத்திரகுமாரனின் இயங்குதளம் தற்போது ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. கே.பியின் சகாக்கள் தற்போது செய்வதறியாது நிற்கின்றார்கள். நாடுகடந்த அரசின் பிரதம கட்டுப்பாட்டாளரும் கேபியின் வலையமைப்பின் பொறுப்பாளருமாகிய குடு மனோவின் குறி தற்போது நிதியில் மையம் கொண்டுள்ளது.
தாயகத்தில் இயங்கும் கேபி குழுவினருக்கான நிதிப்பொறுப் பொறுப்பாளராக குடு மனோ அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பொருட்டு புலம் பெயர் தமிழர்களின் நிதி மூலங்களை தேடியறியும் நடவடிக்கையை இக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக இலகுவாக நிதி சேகரிக்கக் கூடிய தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர். புலம் பெயர் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதிகள் வெளிநாட்டிலும் சிறீலங்காவிலும் கேபியின் நிர்வாகத் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
முதற்கட்டமாக பிரான்சில் நடைபெறவிருக்கும் தமிழர் விளையாட்டு விழாவில் சேகரிக்கப்படும் நிதியை கையகப்படுத்த குடு மனோ தீர்மானித்துள்ளார். அத்துடன் வருமானங்களை ஈட்டித்தரும் மக்கள் சொத்துக்களையும் கபளீகரம் செய்யமுனைந்துள்ளார். இந்த மக்கள் சொத்துக்களை இவர்களிடம் தாரை வார்க்க முனைபவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுவருகின்றோம். இவர்களைப் பற்றிய விபரங்களும் இவர்களின் புகைப்படங்களும் விரைவில் வெளிக்கொண்டுவருவோம்.
இதேவேளை, பரிஸ் புறநகர் ஒன்றில் புனர்வாழ்வு கழகத்துக்குச் சொந்தமான பிரமாண்டமான மண்டபம் ஒன்று இயங்கிவருகின்றது. இந்த மண்டபம் தனியார் நிறுவனமாக பதியப்பெற்று இயங்கிவரும் அதேவேளை, சம்பந்தப்பட்ட மண்டபத்தையும் விற்பனை செய்து அந்த நிதியையும் கையகப்படுத்தும் முயற்சியில் குடு மனோ இறங்கியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழம் எனும்பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் எனவும் இதன் செயற்பாட்டாளர்கள் பல சக்திகளுக்கும் விலைபோய் உள்ளதுடன் இவர்களிடம் கொள்கை ரீதியான செயற்பாடுகள் கிடையாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். கே.பி இலங்கை அரசிடம் சரணடையமுன்னர் அவரால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு இரு முகங்களை கொண்டது என்பதை தற்போது மக்கள் உணரலாம்.
அத்துடன் அதன் செயற்பாட்டாளரில் ஒருவரான மனோ கே.பியின் நெருங்கிய சகா எனக் குறிப்பிடுவதுடன் இலகுவாக பணம் சேகரிக்க கூடிய புனர்வாழ்வு அமைப்பு ஒன்றினை கையாள முற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது புனர்வாழ்வு அமைப்பு என்றால் அதற்கு புலிகளின் ஒருதரப்பினர் கொடுத்துள்ள வரைவிலக்கணம் 'இலகுவாக பணம்சேகரிக்கக் கூடிய அமைப்பு' மாறாக இது தமிழ் மக்களுக்கு உதவிபுரிய உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் அல்ல என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களை புலிகள் எவ்வாறு ஏமாற்றினார்கள் என்பதை வழியில்லாமல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பாரிஸிலில் இயங்கும் மக்களுக்கு சொந்தமான அமைப்பு ஒன்றினையும் அதன் பெயரிலுள்ள கட்டிடத்தினையும் கேபி தரப்பினர் கையாள முனைவதாக குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டின் உள்நோக்கம் அது தமக்கு கிடைத்துவிடவேண்டும் என்றஏக்கமேயன்றி, அது மக்கள் சொத்தாகவே இருந்துவிடவேண்டும் என்ற பொதுநோக்கு கிடையாது. அண்மையில் அது மக்கள் சொத்தாகவிருந்தால், குறிப்பிட்ட சொத்து எங்குள்ளது எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, அது தொடர்ந்தும் மக்கள் சொத்தாகவிருப்பதனை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்ற விடயங்களை கறுப்பினால் வெளியிடமுடியுமா என்ற கேள்வியினை இலங்கைநெற் தொடுகின்றது.
0 comments :
Post a Comment