பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவசர தந்தி !
இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரூர் பிரஸ் கில்டு சார்பில் அவசர தந்தி கொடுக்கப்பட்டது. கரூர் பிரஸ் கில்டு அவசர கூட்டம் அதன் தலைமையகத்தில் அதன் செயலாளர் கே.என். வடிவேல் தலைமையில் ஜூன் 11 ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. தினமலர் ஸ்காட் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்
மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டரும், மூத்த நிருபருமான ஜே.டே. மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் செயல் கடும் கண்டனதிற்கு உரியது.
பட்டப் பகலில் மும்பை போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்ட செய்தி கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உண்மையை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த நிகழ்வு வெளிச்சம் போடுகின்றது.
எனவே, பாத்திரிக்கையாளர்ளுக்கு பாதுகாப்பு வழங்குவது மத்திய அரசின் தலையாய கடமை என்றும், எனவே, பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிருபர்கள் இரத்தினம், ஆனந்த், சண்முகசுந்தரம், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தீர்மானத்தை முன்னிலைப்படுத்தி இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கரூர் பிரஸ் கில்டு சார்பில் அவசர தந்தி கொடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment