லிபியா அதிபர் கடாபி வீடு தீப்பற்றி எரிகிறது
லிபியா நாட்டு அதிபர் கடாபியின் வீடு பாப் அல் அஜீஜீயா அந்த நாட்டு தலைநகர் திரிபோலியில் உள்ளது. இந்த வீட்டு வளாகத்தின் மீது நேட்டோ ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் அந்த வீட்டு வளாகம் தீ பற்றி எரிகிறது. திரிபோலியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குண்டுகள் வீசப்பட்டன.
நேற்று காலையில் குண்டு வெடிக்கும் சத்தம் திரிபோலி நகரில் பலமாக கேட்டது. திங்கட்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை குண்டுகள் வெடித்தபடி இருந்தன. இந்த குண்டுவீச்சில் தொலை தகவல் தொடர்பு மையங்கள் பலத்த சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள யப்ரான் நகரை கைப்பற்றினார்கள். இந்த நகரம் திரிபோலியில் இருந்து 100கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்த ராணுவ வீரர்களை அவர்கள் விரட்டி அடித்தனர். கடந்த 2-ந்தேதி இந்த நகரில் நிறுத்தப்பட்டு இருந்த 2 டாங்கிகளையும், 2 கவச வாகனங்களையும் இங்கிலாந்து நாட்டு போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment