Friday, May 13, 2011

நெதர்லாந்திலிருந்து திருப்பியனுப்படவிருந்த நிலையில் சிறுவன் மரணம்.

நெதர்லாந்துக்கு கடந்த ஏழு வருடத்திற்கு முன்னர் வருகை தந்த குடுபத்தினர் அகதி தஞ்சம் கேட்டிருந்த நிலையில் அவை தொடர்பான வழக்கு அல்மேலோ கோகு என்ற பகுதியில் இடம்பெற்று வந்து அகதி அந்தஸ்க்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலை யில் அவர்கள் நாட்டைவிட்ட வெளியேறவேண்டுமென உத்திரவிடப்பட்டிருந்தது.
.
மூளை பாதிப்படைந்த நிலையில் இருந்த 8வயது குழந்தையுடன் தாயையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என நெதர்லாந்து அரசிடம் சிறுவன் படித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் சமுக நல அமைப்புக்கள் கோரிக்கை வைத்தனர் .

ஆயினும் அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அமைச்சாரன Minister Gerd நேரடி தலைஜீட்டினால் குறித்த குடும்பம் நாடு கடத்த படவிருந்தனர்.

அவ்வேளை தாயின் கையில் எட்டு வயது சிறுவன் மரணம் அடைந்தார் .இந்த சம்பவம் பெரும் பர பரபினையும் பாடசாலை மற்றும் சமுக நலன் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முரணமடைந்த சிறுவினின் பெயர் அ பிராம் எனவும், இவரது தந்தையார் இலங்கையில் உயிரிழந்தபின்னர் அவர் தாயுடன் நெதர்லாந்தில் குடியேறியதாகவும் தகவல் ஒன்று கூறுகின்றது.

குறித்த சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சரே என பகிரங்கமாக குற்றம் சாட்ட பட்டுள்ளது .


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com