பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்களினால் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம். தயான்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை எதிரியாக்கிக் கொள்வது நன்மை பயக்கும் செயல் அல்ல எனவும் அவ்வாறான எதிர்ப்பு, கோஷங்கள் மூலம் சர்வதேச சமுகத்திலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் எனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமேயன்றி, ஐ.நா செயலாளருக்கு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு எதிராக இலங்கையில் பல பிரதேசங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், கையெழுத்து பெறும் போராட்டங்களும் எவ்வித பயனையும் தரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment