புலிகளுக்கு தடை கொண்டுவருமாறு நோர்வேயில் பிரதான எதிர்கட்சி கோரிக்கை!
ஜரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலை நோர்வே நாடும் ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டும் என்று நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்கள் உரக்க குரல் கொடுத்துள்ளதாக பிபிசி இண்று அறிவித்துள்ளது. நெடியவன் விசாரிக்கப்படுவதாக வரும் செய்திகளை நார்வே கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான பீட்டர் எஸ் கிட்மார்க் உறுதிசெய்துள்ளார். அவர் பிபிசி உலக சேவைக்கு வளங்கிய பேட்டியில் புலிகளை நோர்வேக்குள் இயங்குவதற்கு அனுமதிப்பது மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
புலிகள் போர் குற்றம் புரிந்துள்ளனர். தமது ஆயுதப் போரட்டத்தை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் நோர்வேயிலும் வேறு இடங்களிலும் பண வசூல் செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கச்சொல்லி தான் காவல் துறையைக் வலியுறுத்துவதாகவும் கிட்மார்க் கூறினார். விடுதலைப் புலிகள் பணம் வசூலிப்பது என்பது பல காலமாக பகிரங்கமாக நடந்துவருகிறது. இது சமீபத்திலும் நடந்துள்ளது. புலிகள் யுத்த காலத்தில் மாபெரும் போர் குற்றங்களை புரிந்துள்ளனர் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிவில் யுத்தத்தில் புலிகள் பாரிய பொறுப்பை வகிக்கின்றனர். ஆங்கு இடம்பெற்ற போர்குற்ற ங்கள் தொடர்பான ஐ.நா வின் அறிக்கையில் இருதரப்பு மீதும் அச் ஸ்தாபனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புலிகள் மேலும் நோர்வேயில் பணம் சேகரிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் திடமாக நம்புகின்றேன் இலங்கைத் தமிழ் மக்களுக்கு புலிகள் சார்பாக நோர்வேயிலோ வேறு எந்த நாட்டிலோ பணம் வசூலித்து இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்க ஆhவம் கிடையாது என நோர்வே கன்சவட்டிவ் பார்ட்டியின் பா.உ பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.
1 comments :
Norway, the main part of the world Terrorism which is cause for the killings and distruction of Tamils in Sri lanka.
Norway have been playing lots of foul and double games through fake mediation and bullshit SLMM which is opperated by Eric Solheim.
Post a Comment